செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியுள்ளது.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியுள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் 21புள்ளி 13 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2889 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 1086 கன அடியாகவும் உள்ளது.
நேற்றிரவு முதல் மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
அங்கு ஆய்வு மேற்கொண்ட மாவட்டப் பொதுப்பணித்துறைக் கண்காணிப்புப் பொறியாளர், நீர்வரத்து குறைவாக உள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.