இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழப்பு.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது.
மொறட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 84 வயது பெண் ஒருவர், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.