முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 289 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 289 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியாகியுள்ள 2020ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 289மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு(160) மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு வலயக்கல்வி உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
குறித்த கல்வி வலயத்தின் சித்தி அடைவு மட்டம் குறித்து மேலும் தெரிவிக்கையில்:
2020ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 1636 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 289 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்றுள்ள அதேவேளை, 966 மாணவர்கள் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
முல்லைத்தீவுகல்வி வலயத்தின் புதுக்குடியிருப்பு கோட்டத்தில் 775 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 163 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேட்பட்டும், 209 மாணவர்கள் சித்தியும் பெற்றுள்ளனர்.
கரைதுறைப்பற்று கோட்டத்தில் 663 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 104 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேட்பட்டும், 577 மாணவர்கள் சித்தியும் பெற்றுள்ளனர்.
வெலிஓயா கோட்டத்தில் 198 மாணவர்கள் சிங்கள மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 22 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேட்பட்டும், 180 மாணவர்கள் சித்தியும் பெற்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 289 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து 18%அடைவு மட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளது என தெரிவித்தார்.