பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பதற்கு நடவடிக்கை.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பேலியகொடை மீன் சந்தையை மொத்த விற்பனைகளுக்காக இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீளத் திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
உள்ளூர் ரின் மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், பேலியகொடை மீன் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கின்ற முயற்சியின் முதற்கட்டமாக மொத்த வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.