சி.ஐ.டி. வலைக்குள் எரான் விக்கிரமரத்ன நேற்று இரு மணி நேரம் தீவிர விசாரணை.
சி.ஐ.டி. விசாரணை வலைக்குள்
சிக்கினார் எரான் விக்கிரமரத்ன
இரு மணி நேரம் தீவிர விசாரணை
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை வலைக்குள் சிக்கியுள்ளார்.
நேற்று தன் மீது இரு மணித்தியாலங்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விசாரணைக்காக அவருக்குகே குற்றப் புலனாய்வு பிரிவு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கமைய நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜராகி இருந்தார்.
கொழும்பு – மாளிகாவத்தையில் வைத்து அண்மையில் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் மாகந்துரே மதுஷ் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி ஆகியோர் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்துத் தொடர்பிலேயே தன் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது என எரான் விக்கிரமரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்