ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று!
லுணுகலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாக, லுணுகலை பொதுசுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
லுணுகலைப் பகுதியில் வேல்லவெல என்ற இடத்தைச் சேர்ந்த 53 வயதுநிரம்பிய தந்தை, 42 வயது நிரம்பிய தாய், 21 வயது நிரம்பிய மகள், 15 வயது நிரம்பிய மகன் ஆகியோரே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் கடந்த 11 ஆம் திகதி பிலியந்தலையில் மரண வீடொன்றிற்கு சென்று வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதும் இந் நால்வருக்கும்கொரோனாதொற்று உறுதியாகியுள்ளமை தெரிய வந்திருப்பதாக, லுணுகலை பொதுசுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.