ஈழம் என்பது இலங்கையை குறிக்கிறது : ஈழத்திற்கு எந்த தடைகளும் இல்லை – மஹிந்த தேசப்பிரிய

இலங்கையின் தமிழ் சொற்களில் ஈழும் என்பதும் ஒன்றாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட ஹிரு டிவி தொலைக்காட்சியில் ‘சலகுன’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
‘ஈழம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பிலும் ‘ஈழம்’ என்ற சொல் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் ஈழம் என்பது தனி நாடு எனக் குறிக்கும் . ஆனால் ஈழம் என்பது பண்டைய காலம் தொட்டு இலங்கைக்கு பயன்படுத்தப்படும் இன்னொரு பதம்.
மறைந்த பாரத தலைவர் அப்துல் கலாமை அவர்கள் ” நான் முதலில் இந்தியன். தமிழை பேசுவதால் நான் தமிழன். அதற்கு பிறகுதான் நான் இஸ்லாமியன் ” எனத் தெரிவித்த கருத்தொன்றை முன் வைத்து கருத்தாடினார்.
வீடியோ :