நாயாற்று வெளி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

மன்னார் யாழ் பிரதான வீதி,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நாயாற்று வெளி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று புதன் கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
லக்சுமி கரங்களின் கற்பகா திட்டத்திற்கு’ அமைவாக சர்வமத தலைவர்களின் ஆசியுடன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன்,மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ர.சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களுடன் பல்வேறு அமைப்புக்கள் இணைந்து குறித்த மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர். குறித்த பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகள்,150 நாவல் மரங்கள்,ஏனைய மரங்கள் 150 ஆகியவை நடுகை செய்யும் வகையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது திணைக்கள தலைவர்கள், அரச,அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பொது அமைப்பின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.