வியாபார ஸ்தளங்களில் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்களும் சூரை.
கடைகள் உடைத்து பொருட்கள் சூரை
மூதுார் பிரதான வீதியில் அமைந்திருக்கும் வியாபார ஸ்தளங்களில் 5 கடைகள் உடைக்கப்பட்டு பொருட்களும் சூரையாடப்பட்டுள்ளன.
மூதுார் நகரிலுள்ள ஐந்து கடைகள் இரவு உடைக்கப்பட்டு பணம், மற்றும் கையடக்க தொலைபேசி கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஸ்தளத்தில் பொலிசார் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
மூதுார் நகரில் தேநீர்கடை ஒன்றும் மற்றும் சலுான் கடை மற்றும் தொலைபேசி கடை இரண்டும் நகைக்கடை ஒன்றும் இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
தொலைபேசிக்கடையில் ஒரு தொகை பணமும் மொபைல் சாதனங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் சீசீடீவீ கமராவில் பதியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதோடு வா்த்தக சங்கமும் அவ்விடத்தில் சமூகமளித்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.