அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் கொடுத்தால் வரவேற்போம் : இராதாகிருஷ்ணன்
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நாங்கள் வரவேற்போம் . அதுவும் அடிப்படைய சம்பளத்தில் அதிகரிக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வரவுசெலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த அரசாங்கத்தின் போது, 7 பேர்ச் காணி தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.. வீடுகளும் கட்டிக்கொடுக்கப்பட்டன. இம்முறை வரவு செலவுத்திட்டத்தில், முழு நாட்டுக்குமான வீடமைப்புத் திட்டம் பற்றி பேசப்பட்டது. 1,000 ரூபாய் பேசப்பட்டது. தோட்ட மக்களின் பிரச்சினை அத்தோடு முடிந்துவிட்டது.
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நாங்கள் வரவேற்போம் . அதுவும் அடிப்படைய சம்பளத்தில் அதிகரிக்கப்படவேண்டும்.
தோட்டத் தொழிலார்களுக்கான 1,000 ரூபாய் முன்மொழிவு இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனையாகும். 1,000 ரூபாய் தொடர்பில் 22 கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதன்பின்னர் தான் அது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.