வருமானத்தை அதிகரித்து வறுமையை இல்லாது செய்தல் வேண்டும்.
வறுமைப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களை வலுவூட்டி அவர்களது மனைப்பொருளாதாரத்தை மேலுயர்த்தி வருமானத்தை அதிகரித்து வறுமையை இல்லாது செய்தல் வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும் மனைப்பொருளாதார அலகினை பலப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (19) காலை 9 மணிக்கு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் தலைமையில் தீவகம் தெற்கு, தீவகம் வடக்கு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உள்ள ஒரு கிராம சேவகர் பிரிவனை உள்ளடக்கியதாக ஆய்வுப் பட்டறை தீவகம் தெற்கு பிரேதச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கின்றபோது சமுர்த்தியின் பிரதான நோக்கம் வறுமையை ஒழித்தல் ஆகும். சமூக பொருளாதார கட்டமைப்பு காரணமாக வறிய குடும்பங்கள் தொடர்ந்து வறிய நிலையில் காணப்படுகிறது. மக்களிற்கு அறிவூட்டுவதன் மூலம் முன்னேற்றப்படுதல் வேண்டும் வறுமை ஒழிப்பு திணைக்களத்தின் பிரதான பணி வறுமைப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களை வலுவூட்டி அவர்களது மனைப்பொருளாதாரத்தை மேலுயர்த்தி வருமானத்தை அதிகரித்து அவர்களுடைய வறுமையை இல்லாது செய்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் சமுர்த்தியை மக்கள் சமூக அங்கீகாரமாக பார்க்கிறார்களே தவிர சமூக ஒழிப்பிற்கான திட்டமாக பார்க்கவில்லை எனவே இந்த நிலையை மாற்றுவதற்கு இந்த ஆய்வு பட்டறையை அரசாங்கத்தினால் மாவட்ட சமுர்த்தி நிலையம் ஊடாக பிரதேச செயலகங்களில் உள்ள ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு முன்னெடுக்கப்படுகிறது.
வறுமை ஒழித்து வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்களை அரசாங்க நடைமுறைப்படுத்துகிறது.
மக்களை துன்பப்படுத்தும் விதமாக உங்கள் ஆய்வு இருக்கக்கூடாது அவர்களிடம் உண்மைத்தன்மையான விடயங்களை எடுக்கும் வகையில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி முத்திரையை வெட்டும் ஆய்வாக இவ் ஆய்வினை செய்யாமல் ஆய்வினை மேற்கொள்ளுங்கள். மக்களின் மனவுணர்வுகளை புரிந்து அணுகி சிறந்த தொடர்பாடலுடன் ஆய்வை பேற்கொள்ளுதல் வேண்டும்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக மக்களை வலுவூட்டுவதற்கான தேவைகள் காணப்படுகிறது. மக்களிற்கான தேவைகளை இவ் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும்.
நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மக்களை உருவாக்குல் வேண்டும் அதனூடாக அவர்களை வளர்ச்சியடைய செய்தல் வேண்டும். குறிப்பாக சமுர்த்தி ஊடாக வழங்கப்படும் கடனுதவிகள் சரியான நோக்கங்களிற்காக மக்களிற்கு வழங்குதல் வேண்டும்.
மக்கள் கடும் உழைப்பாளிகள் அவர்களிற்கு சரியான வழிகாட்டல் இருக்கும் போது திறனாக செயல்படுவார்கள் எனவும் மேலும்தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி பயனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் விதமாக இவ் ஆய்வு செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
இவ் ஆய்வுப் பட்டறையில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், தீவகம் தெற்கு பிரேதச செயலாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.