பிரதமர் மானெல்வத்த விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டார்!
கௌரவ பிரதமர் மானெல்வத்த விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டார்!
களனி, பொல்லேகல, மானெல்வத்த விகாரையின் விகாராதிபதி தாய்வானின் பிரதான சங்கநாயக்கர் பௌத்த விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி போதாகம சந்திம தேரரை சந்திப்பதற்காக (2020.11.18) புதன்கிழமை விகாரைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தேரரிடம் நலம் விசாரித்தார்.
வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரர், கௌரவ பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு ஆசீ வேண்டி பிரார்த்தித்தார்.
வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடிய கௌரவ பிரதமர், மரியாதைக்குரிய மஹா சங்கத்தினரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து குழுவாக புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டனர்.
நாட்டின் பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் செயல்முறைகளுக்கு பொருந்தும் வகையிலான இறையியல் விடயங்கள் தொடர்பில் வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம தேரர், கௌரவ பிரதமருக்கு அனுசாசனம் செய்ததுடன் கௌரவ பிரதமருக்கு நினைவு பரிசொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அநுருத்த, நிமல் லன்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.