தந்தையை இழந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு.

வவுனியா நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் தந்தையை இழந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்படடுள்ளது.
இன்றைய தினம் (19-11-2020) வவுனியா ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்று வரும் மாணவி செல்வி. கு.குமுதினி சுவிஸ்லாந்து நாட்டில் வசித்து வரும் கருணையுள்ளம் கொண்ட திரு,திருமதி தர்மகுலசிங்கம் சுமதி குடும்பத்தினர் துவிச்சக்கரவண்டியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
வன்னித்தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் வைபவரீதியாக துவிச்சக்கரவண்டியினை மாணவியிடம் வழங்கி வைத்தார்.
ஒலுமடு கிராம அலுவலர் சமூக சேவையாளர் அ.சுகந்தன் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.