திருக்கோவில் வினாயகபுரத்தில் மீன் அறுவடை நிகழ்வு

திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்த்திகு உட்பட்ட விநாயகபுரம்-03 மீன் வளப்பு தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதற்காக கிழக்கு மாகாண மீன் பிடிப்பணிப்பாளர் திரு.சிவபாதசுந்தரம் சுதாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தடாக மீன் வளர்ப்புத்திட்டம் கடந்த 2020.07.15 தடாகத்தில் விடப்பட்டது. இம் மீன் குஞ்சுகள் நான்கு மாதத்திற்கு பிறகு 2020.11.18 நேற்றைய தினம் மீன் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இன் அறுவடையில் ஆரம்ப கட்டமாக 150Kg மீன் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும் 2000kg இருந்து 3000kg மீன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் , உதவிப்பிரதேச செயலாளர் .K.சதிசேகரன் ,மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்M.அனோஜா, கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் திருக்கோவில் பிரதேச நீரியல் வள அபிவிருத்தி உத்தியோத்தர் இரா.அபராஜிதன் ,திருக்கோவில் பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோத்தர் S.ரவீந்திரன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Sathasivam Nirojan