யாழ் ஆய்வுகூடப் பரிசோதனையில் விமானப் படையைச் சேர்ந்த 10 பேருக்குத் தொற்று உறுதி.

10 பேருக்குத் தொற்று உறுதி
யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.”நேற்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கும் விமானப் படையைச் சேர்ந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்குக் கொரோனாத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது” எனவும் அவர் மேலும் கூறினார்.