தலவாக்கலை யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

தலவாக்கலை, சென் கிளாயர் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொடையிலிருந்து குறித்த யுவதி தனது கணவர் சகிதம் கடந்த 16 ஆம் திகதி சென் கிளாயர் பிரிவுக்கு வந்துள்ளார். கணவர் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக லிந்துலை லிப்ட் லிப்பகலை தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்தகாரணத்தால் குறித்த யுவதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கணவர் உட்பட அவருடன் பழகியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள யுவதி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.