வவுனியாவில் பிரபல நகையகத்தில் சூட்சுமமான முறையில் திருட்டு. மூவர் கைது.

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகையகம் ஒன்றில் இருந்து நான்கு இலட்சம் பெறுமதியான நகைகளை சூட்சுமமான முறையில் திருடிய மூன்று திருடர்களை வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகையகம் கடந்த 13.11.2020 அன்று நகை வாங்குவதற்காக தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோர் சென்றுள்ளனர்.

இதன் போது கடை ஊழியரினால் அவர்கள் கேட்கும் நகைகளை காட்டியுள்ளார். இவ்வாறு பல நகைகளை பார்த்த குறித்த நபர்கள் கடை ஊழியர் சற்றே அசந்த நேரத்தில் குறிப்பிட்ட நகைகளை எடுத்துள்ளர்.

பின்னர் தமக்கு பிடித்தமாதிரி நகை இல்லை என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளர்.13.11.2020 மாலை நகைகளின் இருப்பு எடுக்கும் பொழுது குறிப்பிட்ட சில நகைகள் இல்லாமையினால் வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா காவல்நிலைய பொறுப்பதிகாரி மானவடு தலைமையின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி அழகைய்யவன்ன தலைமையில் உப காவல்துறை அதிகாரி பிரனீத்திசாநாயக்க, காவல்துறை உத்தியோகிஸ்தர்களான ரஞ்சித், சந்தன, நிசாந்த , டிசாநாயக்க குமார மற்றும் மது ஆகியோர் அடங்கிய குழுவினரால் அம்பாந்தோட்டை மற்றும் கலாவ பகுதியை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான திருட்டுக்களை மேற்கொண்டிருந்ததுடன் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.