15 ஆயிரம் கி.மீ., பிரச்சாரப் பயணம் – ஸ்டாலின்
தி.மு.க கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு நிருபர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் ஸ்டாலின் அவர்களின் பிரசாரப் பயணத் திட்டத்தைப் பற்றி கூறினார்.
2021 சட்டசபை தேர்தலை ‛விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் எதிர் கொள்கின்றனர் தி.மு.கவினர். அதன் தலைவர் திரு. ஸ்டாலின். ஜனவரி., 5 ந்தேதியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை துவங்குகிறார். 15 ஆயிரம் கி.மீ., பயணத்தில் 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர் நிகழ்ச்சிகளை நடத்தும் அவர், சுமார் 10 லட்சம் மக்களை சந்திக்கும் வண்ணம் இந்த பயணத்தில் அமையும்வாறு ஏற்பாடு செய்யப்படும். .
தி.மு.க., கட்சியில் என்னென்ன திட்டங்கள், எப்படி செயல்படுத்தப்படும் என்பதை இந்த பயணங்களில் எடுத்து செல்வோம். பா.ஜ., அரசின் திட்டங்களுக்கு அனுமதிதந்து மாநில உரிமைகளை விட்டு கொடுத்து சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த ஆட்சியை கலைக்கும் விதத்தில் இந்த பயணம் நடக்கும். இந்த பிரசாரம் 75 நாட்கள் நடக்கும். 15 தலைவர்கள் பங்கேற்பார்கள்.
அத்துடன் திரு.நேரு அவர்கள் திரு.உதயநிதி,கனிமொழி ஆகிய இருவரின் பிரசாரத் தேதியையும் அறிவித்தார்
முதலாவதாக, திருக்குவளையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரத்தை துவங்குகிறார். 29ம் தேதியில் இருந்து கனிமொழி பிரசாரத்தை துவங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.