கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள்.
கடற்சூழலை பேணிப் பாதுகாக்க ;அக்கரைப்பற்று கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு.
கடல் சூழலை பேணிப் பாதுகாப்பதற்காக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அக்கரைப்பற்று 241வது இராணுவ படை முகாம்
இணைந்து அக்கரைப்பற்றில் கடற்கரை பிரதேசத்தை சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வும், மரநடுகையும் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட கடல் சுற்றாடல் உத்தியோகத்தர் கி.சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி பி.வி.ரேணி பிரதீப் குமார கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார்.
அக்கரைப்பற்று -241ஆம் படைப்பிரிவின் வளாகத்தினுள் தென்னை மற்றும் முந்திரிகை மரக்கன்றுகள் நடப்பட்டதுடன்,
சின்னமுகத்துவாரக் கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், 241 வது இராணுவ படைப் பிரிவின் கட்டளைத் தளபதி ஜனக விமலரத்ன, கடல்சார் சூழல் பாதுகாப்புகு அதிகார சபையின் வடக்கு, கிழக்கு உதவி முகாமையாளர் தி.சிறிபதி, 241 வது படைப் பிரிவின் சிவில் சமூக இணைப்பாளர் சமிந்த புஷ்பசிறி, இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.