மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்.
மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தின் பணிகள்ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்று(20) காலை திறந்து வைக்கப்பட்டு அதன் பணிகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற அலுவலகங்களுக்கு அவசியமான கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மாங்குளம் பிரதேசத்தில் நீதிமன்ற கட்டட தொகுதி அமைக்கப்பட்டு அதன் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இம் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் அரசாங்கத்தின் 460 மில்லியன் ரூபாவை ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம் நீதிமன்ற கட்டட தொகுதியானது நீதவான் நீதிமன்ற அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், பதிவு அலுவலகம், சட்டத்தரணிகள் அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.
வினைத்திறன் மிக்க நீதிச் சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.