ஏ9 வீதியின் கொக்காவில் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்.
இன்று மாலை ஏ9 வீதியில் கொக்காவில் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால் அச்சத்தில் பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியில் கொக்கவில் பழைய முறுகண்டி பகுதியில் அண்மைய நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்த்துள்ளதாகவும் மாலை வேலைகளில் காட்டு யானைகள் வீதி ஓரத்தில் நடமாடுவதோடு தீடிரென வீதியை கடந்து செல்வதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
வேலைகளின் நிமித்தம் செல்லும் பலர் மீண்டும் வீடு திரும்பி செல்லும் வேலையில் அச்சத்துடன் செல்வதாகவும் வீதியோரம் காணப்படும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.