இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 18 மூடை மஞ்சள் வசமாக சிக்கியது.

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட
18 மூடை மஞ்சள் வசமாக சிக்கியது
இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 18 மூடை மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார், வங்காலைப் பகுதியில் வைத்து குறித்த மஞ்சளை இடமாற்றம் செய்ய முயன்ற வேளையே இரு நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்ததுடன் மஞ்சளையும் கைப்பற்றினர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சள் யாழ்ப்பாணம் ஆயப் பகுதியினரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.