ஒரு இலட்சம் (கி.மீ) வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய ரீதியிலான நிகழ்வுகள் ஆரம்பம்.
ஒரு இலட்சம் (கி.மீ) வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய ரீதியிலான நிகழ்வுகள் இன்று யாழில் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் வழிகாட்டலில் ஆரம்பித்து வைப்பு.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பு சௌபாக்கிய தொலைநோக்கின் கீழ் கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டலில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு பூராகவும் இன்று காலை 10.00 மணிக்கு “ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒவ்வொரு வீதி” எனும் தொனிப்பொருளின் கீழ் இத்தேசிய வேலைத்திட்டம் நாடு பூராகவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் இன்று (22.11.2020) யாழ் மாவட்டத்தின் வேலணை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 1.5 KM நீளமான முருகையா வீதியானது 46 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கார்பட் இட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள குறித்த பாதையானது, குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாததன் காரணமாக கடந்த காலங்களில் பொது மக்கள் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு கோரியதற்கமைய அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் கிராமிய பாதைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் நிமல் லன்சா அவர்களின் வழிகாட்டலின் கீழ், குறித்த பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இன்று ஆரம்ப நிகழ்வுகளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் நேரடி நெறிகாட்டலின் கீழ் அவரது பிரதிநிதி சதாசிவம் வின்சேந்திரராஜன் அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், ஐனாதிபதி அவர்களின் “உஸ்ம தெனதுரு” 2 இலட்சம் மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள வட மாகாண பணிப்பாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியாளர்கள் மற்றும், கிராமமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.