விசேட அலுவலக ரயில்கள் சேவையில்!
விசேட அலுவலக ரயில்கள் சேவையில்!
சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய திங்கட்கிழமை முதல் விசேட அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை முதல் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளையில் விசேட அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும் குறித்த ரயில்கள் யாவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரதான ரயில் மார்க்கங்கள் ஊடாக கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல ரம்புக்கண கண்டி கனேவத்த மஹவ ஆகிய பகுதிகளில் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் மருதானை, தெமட்டகொட உப ரயில் நிலையம், களனி, வனவாசல உப ரயில் நிலையம் ஹொரபே உப ரயில் நிலையம் ராகம, வல்பொல உப ரயில் நிலையம் மற்றும் பட்டுவத்த உப ரயில்நிலையம் ஆகியவற்றில் நிறுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சிலாபம் ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய ரயில் நிலையங்கள் வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
மேலும் குறித்த ரயில்கள் மருதானை, தெமட்டகொடை உப ரயில் நிலையம் ,களனி, வனவாசல உப ரயில் நிலையம், ஹொரபே உப ரயில் நிலையம், ராகம பேரலந்த உப ரயில் நிலையம், குரண, நீர்கொழும்பு கட்டுவ எப ரயில் நிலையம் ஆகியவற்றில் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களனிவெலி ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம, அவிஸ்ஸாவலை,வரை ரயில்கள் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ரயில்கள் மருதானை, பேஸ்லைன் வீதி, ஆகிய ரயில்நிலையங்களில் நிறுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கரையோர ரயில் மார்க்கங்களில் பயணிக்கும் ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து பாணந்துறை, களுத்துறை வடக்கு, அளுத்கம, ஹிக்கடுவ, காலி, மாத்தறை, பெலிஅத்த ஆகிய ரயில் நிலையங்கள் வரை பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது