கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே உள்ளது.
திருவையாறு கிராமத்தில் கொரோனா எதிரொலி பாடசாலையில் 13 மாணவர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.
கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் தாயின் மரண வீட்டிற்கு கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் இருந்து வந்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அக் கிராமத்தில் 36 மேற்பட்ட குடும்பங்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் பல பாடசாலைகளிலும் மாணவர்களின் வரவு சுமாராக இருந்த போதும் திருவையாறு பாடசாலையில் மட்டும் கொரோனா அச்சம் காரணமாக ஆரம்ப பிரிவு மாணவர்களை தவிர 400 மாணவர்கள் வரவேண்டிய இடத்தில் 13 மாணவர்களே பாடசாலைக்கு சமூமளித்திருந்தனர்.
அத்தோடு 45 ஆசிரியர்களில் 19 ஆசிரிகள் சமூகமளித்திருந்தனர். திருவையாறு கிராமத்தில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு பலரும் சென்று வந்த நிலையில் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்த போதும் பெற்றோர்கள் அச்சம் காரணமாக
தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை தெரியவருகிறது. இதேவேளை
பாடசாலையினையும் 14 நாட்கள் தாமத்தித்து ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகள் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக நடைப்பெற்று வருகிறது