ராகம வைத்தியசாலையில் உயிரிழந்த கைதிக்கு கொரோனா.

ராகம வைத்தியசாலையில் உயிரிழந்த கைதிக்கு கொரோனா
ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
82 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹர சிறைச்சாலையில் கைதியாக இருந்த அவர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.