கோயிலுக்குள் காதலர்கள் லிப்லாக்…#BanNetflix, #boycottnetflix ஆகிய ஹேஷ்டேக்குகள்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தை புறக்கணிப்போம் என்பதாகக் கூறி #BanNetflix, #boycottnetflix ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

ஆன்லைன் தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு தணிக்கை என்பதே இல்லை என்பதால் நாளுக்கு நாள் ஆபாசம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ் பிளேயர், ஜீ5 ஆகிய ஓடிடி தளங்களில் அளவில்லாத படங்களும், வெப் தொடர்களும் கொட்டிக்கிடக்கிறது.

ஆனால் அத்துடன் சேர்த்து நெருக்கமான படுக்கை அறை காட்சிகள், லிப் லாக், இரட்டை அர்த்த வசனங்கள், காது கூசும் கெட்ட வார்த்தைகள் என ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெப் சீரிஸ் என்ற பெயரில் கொட்டி கிடக்கும் ஆபாச படங்களை நீக்க போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.