அரசின் அநீதிகளை கொடுஞ்செயல்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்கவேமுடியாது.
அரசின் அநீதிகளை கொடுஞ்செயல்களை
நாம் பார்த்துக்கொண்டு இருக்கவேமுடியாது.
எதிர்க்கட்சி பலமிக்கதாக இருக்க வேண்டும் எனவும்
சஜித்துடனான சந்திப்பின் பின் சந்திரிகா தெரிவிப்பு
“அரசின் முறைகேடுகளை – அநீதிகளை – கொடுஞ்செயல்களை – அக்கிரமங்களை எம்மால் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. விரைவில் இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டும்; தீர்வு வேண்டும். அதேவேளை, எதிர்க்கட்சியும் பலமாக இருக்க வேண்டும்.”
– இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
“நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாகவே இந்த அரசு செயற்படுகின்றது. கொரோனாவின் மூன்றாவது அலை நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இந்த அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணமாகும்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“நாட்டினதும் மக்களினதும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும்போதே சந்திரிகா மேற்கண்டவாறு கூறினார்.