ரிஷாட் பதியூதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரிஷாட் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நீடித்த இழுபறிகளுக்கு மத்தியில் பல கட்டங்களாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் பின் அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.