கேப்பாப்புலவில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குடியிருப்பின் ஒரு பகுதி சேதம்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவின் மாதிரி கிராம குடியிருப்பில் உள்ள வீட்டின் முற்றத்திலிருந்த பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் குடியிருப்பின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. நிவார் புயலின் கடும் காற்றுடன் கூடிய மழையுடன் காரணமாக, குடியிருப்பிற்கு அருகில் இருந்த மரம் சரிந்து வீழ்ந்ததில் மரக்கிளை வீட்டின் கூரை மீது விழுந்துள்ளதால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்து. பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் சேதத்திற்கான உத்தேச மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் நடவடிக்கைக்காக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை(27) அதற்குரிய கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்று தலைமுறைகளை கடந்துள்ள குறித்த சரிந்து விழ்ந்த மரத்தை வீட்டு உரிமையாளர் விற்பனை செய்துள்ளதுடன் அவர்கள் வெட்டி எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.