நஞ்சற்ற விவசாயம் தொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு.

நஞ்சற்ற விவசாயம் தொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று புல்மோட்டை கமநல சேவை நிலையத்தில் நடைபெற்றது.
நஞ்சற்ற விவசாயத்தின் தேவை இன்று உணரப்படுவதனால் அரசாங்கம் இத்துறைசார் உற்பத்திகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
Peace winds Japan நிறுவனத்தின் அனுசரனையில் இவ்விழிப்புணர்வுவேலைத்திட்டம் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விவசாயிகளை இயற்கை விவசாயத்தின்பால் ஈர்த்து அவர்களது உற்பத்திகளுக்கு சிறந்த சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே இதன் மூல நோக்கமாகும்.