வெள்ளத்தில் மூழ்கிவிட்டதா பிக்பாஸ் வீடு?
நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது, செம்பரபாக்கம் ஏரி திறந்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு சில கிலோமீட்டர் பக்கத்திலேயே இருக்கும் பிக்பாஸ் செட் உள்ளும் வெள்ளம் புகுந்து விட்டதாகவும் இதனால் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ஒருசில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இது குறித்து பிக்பாஸ் தரப்பினர்களிடம் இருந்து வெளிவந்த செய்தியின்படி பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் புகுந்தது உண்மைதான் என்றும் ஆனால் அவை பாதிக்கும் அளவுக்கு இல்லை என்றும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக 4 மணி நேரம் மட்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டார்கள் என்றும் அதன் பின்னர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு உடன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் வந்து விட்டதாகவும் நிகழ்ச்சி தொடர்வதாகவும் தெரிகிறது.
ஆனால் இந்த நான்கு மணி நேரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் மைக் இல்லாமல் இருந்ததால் அவர்களுக்குள் என்ன பேசிக் கொண்டார்கள்? அவர்கள் ஸ்டேட்டர்ஜி மாறுமா? என்பதை இன்று அல்லது நாளைய நிகழ்ச்சிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.