ஐந்து தமிழ் பேசும் வீரர்கள் லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. அஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ், குசல் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ், திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ், தசுன் சானக்க தலைமையிலான தம்புள்ள வைக்கிங் மற்றும் ஷஹீட் அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒவ்வொரு அணிகளினதும் குழாம்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு அணியிலும் 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தமாக 5 தமிழ் பேசும் வீரர்கள் இம்முறை லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் 2 வலைப்பந்துவீச்சாளர்களுமாகும்.
இதில் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் வீரரான மொஹமட் சிராஸ் காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஏனைய நால்வரும் திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் பேசும் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகும்.
விஜயகாந்த் வியாஸ்காந்த், கனகரத்தினம் கபில்ராஜ், தெய்வேந்திரம் தினோஷன் மற்றும் செபஸ்திபன்பிள்ளை விஜயராஜ் ஆகியோராகும்.
இதேவேளை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் மேலும் 2 தமிழ் பேசும் வீரர்கள் வலைப்பந்துவீச்சாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த ரத்னராஜ் தேனுரதன், கிளிநொச்சியைச் சேர்ந்த செபஸ்தியன்புள்ளே விஜயராஜ் மற்றும் கொழும்ப டெஹான் ஷாப்டர் ஆகிய மூன்று வீரர்களும் வலைப்பந்துவீச்சாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.