இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு சாரதி காயமடைந்துள்ளதுடன் மற்றொரு லொறி சாரதி தப்பி ஓடியதாக தெரியவருகின்றது.
இச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.