புதிய பொலிஸ்மா அதிபராக சீ.டீ. விக்கிரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபரரக நியமிக்கப்பட்ட சந்தன விக்கிரமரத்ன சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
இதுவரை, பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட இவரின் பெயர் கடந்த தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொலிஸ்மா அதிபராக பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அது பாராளுமன்ற குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.