கலஹா பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா வீசந்திரமலை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
33 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவரை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கடந்த 9 ஆம் திகதி கலஹா, வீசந்திரமலை பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவருக்கு 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கடந்த 25 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் நேற்று (26) வெளியாகின.
இதில் குறித்த நபரின் சகோதரிக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது