வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம்.
அடுத்த புயல் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு-
வங்ககடலில் 23ம் தேதி உருவான நிவர் புயல் நேற்று (26ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது..
இந்த புயல் திருவண்ணாமலை, வேலூர் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றது. இதனால் புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டியது. பல பகுதிகள் தண்ணீர் மூழ்கின.
நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று கூறியுள்ளது.
நிவர் புயல் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தில் கரையை கடந்து சென்ற மாவட்டங்களில் இன்னமும் புயலின் தாக்கம் குறையவில்லை.
வெள்ள நீர் வடியவில்லை. இந்த சூழலில் இன்னும் இரண்டு நாளில் உருவாக உள்ள புயலால் டிசம்பர் 1 முதல் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.