இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனாவால் சாவு! – இதுவரை 107 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 4 ஆண்களும், 4 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்றும் 473 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 18 ஆயிரத்து 960 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 226 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 168 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.