நாடாளுமன்றம் வரும் முன் அமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்துச் செய்கின்றார் பஸில்.

நாடாளுமன்றம் வரும் முன் அமெரிக்கப் பிரஜாவுரிமை இரத்துச் செய்கின்றார் பஸில்?
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச, தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்த பின்னரே நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிப்பார் என்று நம்பகர வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் பஸில் ராஜபக்ச வருவாரா? இல்லையா? என்கின்ற சந்தேகம் வலுத்துவரும் நிலையில் அரச தரப்பிலுள்ள ஓரிரு அமைச்சர்கள் இணைந்து, ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான குறிப்பிட்ட அமைச்சரிடம் இதுபற்றி வினவியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்துள்ள குறிப்பிட்ட அமைச்சர், பஸில் ராஜபக்ச இப்போதைக்கு நாடாளுமன்றத்துக்குப் பிரவேகிக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமது அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிவிட்டு இலங்கைப் பிரஜாவுரிமையுடனேயே அவர் நாடாளுமன்றம் பிரவேசிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அடுத்து பிரதமர் பதவியை பஸில் ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என்கின்ற பேச்சும் அரச மட்டத்தில் உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கது.