ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலைக்கு பின்னால் இஸ்ரேல் மற்றும் டிரம்ப் ?
ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டார் : இஸ்ரேலுக்கும் டிரம்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் அதிகரித்துள்ளன.
ஈரானின் நம்பர் ஒன் அணு விஞ்ஞானி மோஷின் ஃபக்ரிசாதே நேற்று படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் “சூத்திரதாரி” என்று அவர் நோக்கப்பட்டார்.
தெஹ்ரானுக்கு கிழக்கே அவர் பயணித்த கார் தாக்கப்பட்டது, மற்றும் புகைப்படங்களில் விண்ட்ஷீல்ட் காரின் முன் கண்ணாடிகள் சிதைந்திருப்பது தெரிகிறது.
ஈரானிய அரசு ஊடகங்களும் இது ஒரு கொலை போல் தெரிகிறது எனக் கூறுகின்றன. ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகேடியர் ஜெனரல் அமீர் ஹடாமி கூறுகையில், ஃபக்ரிசாதே பயணித்த நிசான் காரை நோக்கி யாரோ ஒருவர் சுட்டதனால் அவர் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
மொசாட் தேடிக் கொண்டிருந்த ஒருவர் ஃபக்ரிசாதே
‘இந்த படுகொலையில் இஸ்ரேல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கடுமையான சந்தேகம் உள்ளது. இது ஒரு கோழைத்தனமான செயல் ”என்று ஈரானின் வெளியுறவு மந்திரி ஷெரீப் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட ஃபக்ரிசாத் ஈரானின் மிகவும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஈரானின் ரகசிய இராணுவத் திட்டத்தின் தலைவராக இருந்த விஞ்ஞானியை, மொசாட் பல ஆண்டுகளாகத் தேடி வருவதாகக் கூறி ட்வீட் செய்ததைக் காண முடிந்தது. என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் செய்தியை ஆதாரமாக வைத்து ஈரானிய பத்திரிகையாளரிடமிருந்தும் ஒரு டுவிட் வெளியாகியுள்ளது.
டிரம்பின் தொடர்பு?
முன்னதாக, அமெரிக்கா இஸ்ரேலின் நண்பர் என்றும், ட்ரம்ப் தனது பதவியில் இருந்த வெளியாவதற்கு முன்னரான இறுதி வாரங்களில் இருந்தே ஈரானின் அணு உலைகளை தாக்க “மாற்று திட்டம்” ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் பல அறிக்கைகளில் இந்த விஞ்ஞானியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த மரணம் ஈரானிய எதிரிகளுக்கு பகலில் கூட தங்கள் இலக்கை அடைய முடியும் என்பதாக ஒரு தெளிவான செய்தியைக் தெரிவிக்கிறது, என CNN தெரிவித்துள்ளது.