ஆயுர்தேவ வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆயுர்வேத வைத்தியருக்கு கொரோனா
கேகாலை மாவட்டம் ருவன்வெல்லாவில் உள்ள அங்கருவெல்லா பகுதியில் ஆயுர்தேவ வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் ஒரு நாளைக்கு 100-150 வரையான நோாயளிகளுக்கு சிகிச்சையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரும் அவரது மனைவியும் 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர், நேற்று பெறப்பட்ட முடிவுகளின்படி, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யபப்ட்டுள்ளது.
இருப்பினும், பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்ட போதிலும் இந்த ஆயுர்வேத மருத்துவர் நேற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக அப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிகிச்சை மையத்தில் சிகிச்சையின் போது மருத்துவர் முககவசத்தை அணியவில்லை என்றும், நோயாளிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், கை சுத்திகரிப்பு திரவம் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவரிடம் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் சுகாதார அதிகாரிகளை தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.