மாஸ்டர் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்சில் வெளியீடு.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது.
ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்டோர் மறுத்தனர்.
இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் மாஸ்டர் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடலாமா அல்லது தியேட்டரில் வெளியிடலாமா என்று இதுவரை முடிவு செய்யவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன