கண்டியில் மீண்டும் நிலநடுக்கம்!

கண்டி மாவட்டத்தில் திகன உட்பட சில பகுதிகளில் இன்றிரவு 9.04 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் ஆய்வுத் திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில், கடந்த 4 மாதங்களில் ஏற்பட்ட 4ஆவது நில அதிர்வு உணர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.