கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மரநடுகை நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கிறது
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மரநடுகை நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கிறது. அதிகளவான மரங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை மீள் நிரப்பு செய்யும் வகையில் தொடர்ச்சியாக மரநடுகை செயற்பாடுகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகிறது.
மரங்களை நாட்டி அதனை வளர்த்தெடுத்து எமது சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரினுடையது. எனவே இச் செயற்றிட்டத்தில் நானும் கலந்துகொண்டமையிட்டு நிறைவடைகின்றேன் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
இன்று கிளிநொச்சி பரந்தன் கரடிபோக்கு இணைப்பு வீதியில் ஓசியர் கடைச்சந்தியில் இடம்பெற்ற12 வது கற்பகா திட்டத்தின் கீழ் ஆறாயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லண்டன் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் பிரதான அனுசரைணையில் கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, பிரதேச கமக்கார அமைப்புகள், கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மரங்கள் நடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இச் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இன்றைய இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்,வட மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பிறேமகுமார், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் இணைப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி. வீதி அபிவிருத்தி அ்திகார சபையின் ஐ றோட் இணைப்பாளர் மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள
பொறியியலாளர்கள்,விவசாய திணைக்கள அதிகாரிகள் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்கொண்டனர்.