மஹர சிறைக்கு முன் பதற்றம் : சிறைச்சாலைக்கு முன்பாக கூடிய உறவினர்கள் (வீடியோ)

மஹர சிறைச்சாலைக்கு முன்பாக மக்கள் கூடியுள்ளதுடன், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சுமார் 100 கைதிகளுக்கும் மேற்பட்டவர்களின் உறவினர்களே சிறைச்சாலைக்கு முன்பாக கூடியிருக்கின்றது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது என வைத்தியசாலைகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இன்னும் சில கைதிகள், கொழும்பு வடக்கு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.