கண்டியில் முதலாவது கொரோனா தொற்றாளருடைய மரணம்.

கண்டியில் முதலாவது கொரோனா தொற்றாளருடைய மரணம் சம்பவம் பதிவாகியுள்ளது.
கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார் என்று மத்திய மாகாண சுகாதாரப் பணிமனை தெரிவிக்கின்றது.
வீட்டில் சுகவீனமுற்ற நிலை காரணமாக அவரது மனைவியின் மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் மரணம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இக்பால் அலி