வாகரை பிரதேச சபையின் பாதீடு பெரும்பான்மை வாக்குளால் தோற்கடிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையின் பாதீடு தொடர்பான சபை அமர்வு இன்று தவிசாளர் சீ.கோணலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் நிகழ்ச்சி நிரலின் படி பாதீட்டினை சபைக்கு சமர்பித்து குறைபாடுகள்,பாதீட்டில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு சபையினை கேட்டுக்கொண்டார்.

இதன்போது மேற்படி விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் மாறாக வாக்கெடுப்பிற்கு விடுமாறு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.இதனையடுத்து வெளிப்படையான வாக்கெடுப்பிற்கு தவிசாளர் அனுமதி வழங்கினார்.

12 பேர் எதிராகவும் 6 பேர் ஆதரித்தும் வாக்களித்தனர்.எனவே 2021 ஆண்டிற்கான பாதீடானது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிராகரிக்கப்பட்டது.
கடந்த 23.11.2020 ஆம் திகதியன்று நடைபெற்ற பாதீடு தொடர்பான சபை அமர்வில் தவிசாளர் நிகழ்ச்சி நிரலின்படி பாதீட்டு அறிக்கையினை சமர்பிக்காமல் அமர்வினை ஒத்தி வைத்து நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.