பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் செயற்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாட்கள் செயற்த்திட்டம் இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் முன்னிலையில் விழிப்புனர்வு துண்டு பிரசுரங்களை கையளித்து ஆரம்பித்துவைத்தனர்.
கொரோனா தொற்றுக்காலத்தில் அதிகளவான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகலவில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான விழிப்புனர்வுகள் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரனி மயூரி ஜனனன் குறிப்பிட்டார்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இது தொடர்பான விழிப்புனர்வு செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான துண்டு பிரசூரங்களும் ஸ்ரிக்கர்களும் வெனர்களையும் பொதுமக்கள் அதிகளவானவர்கள் கானப்படும் இடங்களில் காட்ச்சிபடுத்தப்படவுள்ளதாகவும் மயூரி தெரிவித்தார்.
இன் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சினி ஸ்ரீகாந்த் முகுந்தன் நவரூபரஞ்சனி மட்டக்களப்பு வலைய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மாவட்ட அரசாங்க தகவல் திணைக்கள பெறுப்பதிகாரி வ.ஜீவானந்தன் மற்றும் அருவி பெண்கள் வலையமைப்பின் அங்கவத்தவர்களும் கலந்துகொண்டனர்.
சதாசிவம் நிரோசன்