கிளிநொச்சி சந்தை வளாகத்தின் சுகாதார நடைமுறைகளை பார்வையிட்ட அரச அதிபர்.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் கொரோனா தடுப்பு செயலணியின் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
கொவிட்-19 தொற்றின் பரவலினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற கிளிநொச்சி சந்தை வளாகத்தின் சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு சீர்படுத்தும் நோக்கத்துடன் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த களவிஜயத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களுடன் மாவட்ட சுகாதாரத்துறையினர் மற்றும் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் பொலீஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து ஈடுபட்டனர்.