மட்டக்களப்பில் சுயாதீன ஊடகவியலாளர் கைது! – வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு.
மட்டக்களப்பில் சுயாதீன ஊடகவியலாளர் கைது! – வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு.
மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பான பதிவை தனது ‘பேஸ்புக்’கில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை – கிண்ணையடியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை கோகிலதாசன் (வயது 37) என்பவரே கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் பின்னர் அவர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்